சுங்கை கோலோக் வழியாக நடத்தப்பட்ட எல்லைக் கடந்த குற்றச் செயல்கள் 90% கட்டுப்படுத்தப்பட்டன

சுங்கை கோலோக் வழியாக நடத்தப்பட்ட எல்லைக் கடந்த குற்றச் செயல்கள் 90% கட்டுப்படுத்தப்பட்டன

கோத்தா பாரு, 05/02/2025 : கடந்தாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி கடுமையாக்கப்பட்ட அமலாக்கத்திலிருந்து, சுங்கை கோலோக்கைப் பயன்படுத்தி எல்லைக் கடந்த குற்றச் செயல்களும் நடவடிக்கைகளும் 90 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோதச் செயல்களை ஒடுக்குவதில் அந்நடவடிக்கை பெரும் வெற்றியாகப் பார்க்கப்படும் அதேவேளையில், கிளந்தான் மாநில மக்கள், தாய்லாந்து, கோலோக்கில் மனமகிழ்வு நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதையும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதையும் உறுதி செய்வதாக அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.

”அவர்களின் பானங்களில் போதைப்பொருள் கலக்கப்படும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். பொழுதுபோக்கு மையங்கள் தானாகவே போதைப்பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. அவர்கள் அங்கு மனமகிழ்வுக்காக இருந்தால் போதைப்பொருளை உட்கொள்ளும் அபாயம் உள்ளது. இது இறுதியில் போதைப் பழக்கத்திற்கு அவர்களை இட்டுச் செல்லும் என்று நாங்கள் அச்சம் கொள்கிறோம்.
நதியின் நீளம் மட்டும் 106 கிலோமீட்டர். பி.ஜி.ஏ மற்றும் பொது உட்பட எல்லை மட்டும் 136 கிலோமீட்டர். மலேசியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே உள்ள எங்கள் எல்லைக்கு இடையே, என்னில் 90 விழுக்காடு வரை குறைக்க முடிந்தது. இது, எல்லை தாண்டிய குற்றங்களைக் கையாளும் அளவிற்கு பெரியது”, என்று அவர் கூறினார்.

இன்று, கிளந்தான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மலேசிய தாய்லாந்து எல்லையில் உள்ள சட்டவிரோத தளங்களை மூடுவது, வரி வசூலிப்பின் அதிகரிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக முஹமட் யூசோஃப் மேலும் குறிப்பிட்டார்.

Source : Bernama

#KelantanPolice
#DatukMohdYusoffMamat
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.