அலோர்ஸ்டார், 05/02/2025 : இன்று, இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 268-வது ஆட்சியாளர் மன்ற கூட்டத்திற்கு கெடா சுல்தான் அல்-அமினுல் கரிம் சுல்தான் சலேசஹுடின் சுல்தான் பட்லிஷா தலைமையேற்றார்.
கடந்த ஆண்டு, அக்டோபர் 23-ஆம் தேதி, மாட்சிமை தங்கிய துணை மாமன்னர், சுல்தான் நஸ்ரின் தலைமையில் அக்கூட்டம் இரண்டு நாள்களுக்கு நடைபெற்றது.
இன்று தொடங்கிய கூட்டத்திற்கு திரெங்கானு சுல்தான் சுல்தான் மிசான் சைனால் அபிடின், , பெர்லிஸ் ராஜா டுவான்கு சைட் சிராஜுடின் ஜமாலுலாயில் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் சராஃபுடின் இட்ரிஸ் ஷா, இடைக்கால சுல்தான் ஜோகூர், பட்டத்து இளவரசர் Ismail மற்றும் நெகிரி செம்பிலான் ஆளுநர் துவான்கு மூரிஸ் துவான்கு முனாவிர் ஆகியோர் வருகைப் புரிந்தனர்.
பகாங் பட்டத்து இளவரசர், தெங்கு ஹசானல் இப்ராஹிம் அலாம் ஷா மற்றும் கிளந்தான் பட்டத்து இளவரசர் தெங்கு முஹமட் ஃபக்ரி பெட்ரா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
பினாங்கு மாநில ஆளுநர் துன் அஹமாட் ஃபுசி அப்துல் ரசாக்,மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம், சபா மாநில ஆளுநர், துன் முசா அமான் மற்றும் சரவாக் மாநில ஆளுநர், துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜஃபார் ஆகியோரும் இக்கூட்டத்திற்கு வருகைப் புரிந்தனர்.
Source : Bernama
#AlAminulKarimSultanSallehuddinSultanBadlishah
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia