கோலாலம்பூர், 7 ஆகஸ்டு- நாடறிந்த மூத்த கவிஞரும், உங்கள் குரல் பத்திரிகை ஆசிரியருமான கவிஞர் சீனி நைனா முகமது இன்று காலை இயற்கை எய்தினார். மலேசியாவில் தொல்காப்பியத்தில் ஆழ்ந்த அறிவும், சிறந்த மரபுக் கவிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கிய சீனி நைனா முகமதுவின் மறைவு, மலேசிய தமிழ் எழுத்துத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.
மூத்த கவிஞர் சீனி நைனா முகமது மரணம்
