ஆகஸ்டு 8- MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் முதல் மலேசியர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த எலைன்ஸ் தியோ (வயது 27) தனது டச்சு காதலருடன் ஐரோப்பிய சுற்றுலாவுக்குச் சென்று விட்டு தாயகம் திரும்புவதற்காக MH17 விமானத்தில் பயணித்துள்ளார். ஆனால் உக்ரைன் எல்லையில் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதையடுத்து விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
ஆஸ்திரேலியா, மெல்பர்னில் பயின்ற எலைன் தியோவை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெதர்லாந்தில் தடவியல் நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து எம்.ஏ.எஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும், போலீசாரும் தியோவின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்க அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனிடையே, எலைன் தியோவுடன் அதே விமானத்தில் பயணம் செய்த அவரது டச்சு காதலரான 27 வயது எமில் மாஹ்லர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
தியோவும், மாஹ்லரும் மெல்பர்னில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அவர்களிருவரும் ஹாலந்து மற்றும் போர்த்துகலுக்குச் சுற்றுலா மேற்கொண்டப் பின் கோலாலம்பூருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.