என் தமிழ்

19வது சிலாங்கூர் மாநில ம இ கா இளைஞர் பிரிவு பேராளர் மாநாடு

SelangorYouthAGM2 SelangorYouthAGM1

சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த 06/07/2014 அன்று நடைபெற்ற 19வது சிலாங்கூர் மாநில ம இ கா இளைஞர் பிரிவு பேராளர் மாநாடு ரத்து செய்யப்பட்டு 07/08/2014 அன்று மாலை 08.00 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள தேசிய ம இ கா இளைஞர் பிரிவின் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநாட்டில் தேசிய ம இ கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் பேசுகையில் இனி சிலாங்கூட் மாநில ம இ கா இளைஞர் பிரிவும் தேசிய ம இ கா இளைஞர் பிரிவும் இணைந்து பணியாற்றும் என கூறினார். இந்த பேராளர் மாநாடு அமைதியான முறையிலும் மிகவும் சிறப்பாகவும் நடந்தேறியது. கணக்கறிக்கையும் ஆண்டறிக்கையும் முறையாக சமர்மிக்கப்பட்டதாகவும் அதை ஏகமனதாக பேராளர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் திரு. சிவராஜ் அவர்கள் தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் சூழலில் சிலாங்கூர் மாநில ம இ கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. முகிலன் துணை தலைவர் திரு. ஸ்ரீதரன், திரு. அரவிந்தன், திரு. கஜேந்திரன் போன்ற அனுபவமிக்க இளைஞர்கள் கேட்பாளர்களாக போட்டியிட தயாராக இருப்பதாக திரு. சிவராஜ் கூறினார். ம இ கா இளைஞர்கள் தேர்தல் நேரத்தில் தேசிய முன்னனியின் வெற்றிக்காக முழு மூச்சில் பாடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்.

Scroll to Top