மலேசிய தமிழன் உதவும் கரங்கள் உறுப்பினர்கள் இந்த வருடம் தண்ணீர்மலையில் மாற்றுத்திறனாளி பக்தர்களை சுமந்து சென்று முருகப் பெருமானை தரிசிக்க வைக்க இருக்கிறார்கள்

மலேசிய தமிழன் உதவும் கரங்கள் உறுப்பினர்கள் இந்த  வருடம் தண்ணீர்மலையில் மாற்றுத்திறனாளி பக்தர்களை சுமந்து சென்று முருகப் பெருமானை தரிசிக்க வைக்க இருக்கிறார்கள்

கோலாலம்பூர், 01/02/2025 : டாக்டர் முரளி தலைமையிலான மலேசிய தமிழன் உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் வருடம் தோறும் தைப்பூச சமயத்தில் படிகட்டுகளில் ஏற முடியாத மாற்றுத்திறனாளி பக்தர்களை சக்கர நாற்காலியுடன் மலை மீது சுமந்து சென்று முருகப் பெருமானை தரிசிக்க செய்வதை சேவையாக செய்து வருகிறார்கள். மிகவும் சிரத்தையுடன் இந்த பணியை செய்யும் மலேசிய தமிழன் கரங்கள் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் அதன் தலைவர் திரு. முரளி அவர்களை முருகனை தரிசித்த மற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் என அனைவரும் போற்றுவர்.

இது வரை சிலாங்கூரில் பத்து மலையில் உள்ள முருகர் கோவிலில் இந்த சேவையை செய்து வந்த மலேசிய தமிழன் உதவும் கரங்கள் அமைப்பினர் இந்த வருட தைப்பூசத்திற்கு இந்த சேவையை பினாங்கில் உள்ள தண்ணீர்மலை ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் செய்ய இருக்கிறார்கள். இதன் பொருட்டு எதிர்வருகின்ற 2025 வருடம் பிப்ரவரி மாதம் 02 ஆம் தேதி பிற்பகல் 03.00 மணியளவில் சக்கரநாற்காலியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை தண்ணீர்மலையில் மலைமீது இருக்கும் அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சுமந்து சென்று அந்த பால தண்டாயுதபாணியை தரிசனம் செய்விக்க இருக்கிறார்கள். சுமார் 513 படிக்கட்டுகள் கொண்ட இந்த மலைக் கோவிலுக்கு இந்த மாற்றுத்திறனாளி பக்தர்களை சுமந்து செல்லும் பணியை மலேசிய தமிழன் உதவும் கரங்கள் தன்னார்வலர்கள் செய்ய இருக்கிறார்கள். மலேசிய தமிழன் உதவும் கரங்கள் அமைப்பினரின் இந்த சேவையை இந்த தருணத்தில் என் தமிழ் ஊடகக் குழுமம் பாராட்டுகிறது.

#MalaysianTamilanUthavumKarangkal
#DrMuraly
#Thanneermalai
#SriBalathandayuthapanySwamyTemple
#ThaiPoosam
#ThaiPoosam2025
#ThaiPoosamInMalaysia
#Penang
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia