கோலாலம்பூர், 26/01/2025 : அரசியலின் வியூகம் மற்றும் அதன் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது மட்டுமின்றி அம்னோ போராட்டத்தின் உண்மையான மதிப்பையும், எதிர்கால தலைவர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட அம்னோ நாட்டுப்பற்று பள்ளியை அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி, இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
அரசியல் கல்வியை மட்டும் போதிக்கும் இடமாக இல்லாமல், இளம் தலைமுறையினரிடையே போராட்ட உணர்வை ஏற்படுத்தும் ஒரு களமாக அப்பள்ளி அமையும் என்று, துணைப் பிரதமருமான அஹ்மாட் சாஹிட் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பேச்சுத் திறமை மற்றும் கோட்பாடுகளை அடையும் தலைவர்களை உருவாக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்காமல், போராடும் வலிமை மற்றும் உயர்ந்த போட்டித்திறன் கொண்டவர்களை உருவாக்க அப்பள்ளி அமைக்கப்பட்டிருப்பதாக, அவர் கூறினார்.
நாட்டு அரசியல் நிலைத்தன்மைக்கு முதுகெலும்பாக இருப்பதுடன், அதற்கு ஏற்புடையதாக அமைவதை உறுதிச் செய்வதற்காக அம்னோ மேற்கொண்ட இம்முயற்சி ஒரு வியூக நடவடிக்கை என்று அஹ்மாட் சாஹிட் விளக்கினார்.
விமர்சன சிந்தனை, வியூக தலைமைத்துவம் மற்றும் அம்னோ போராட்டத்தின் ஆழமான புரிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பயிற்சி தொகுப்பு முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்க தொடக்கக் கட்டமாக 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனினும், தயார் செய்துள்ள அப்பயிற்சி தொகுப்புகள் அவ்வப்போது மேம்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Source : Bernama
#ZahidHamidi
#UNMOSchools
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia