ஜாலான் பினாங், 26/01/2025 : மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் வர்த்தகம் மற்றும் முதலீடு மட்டும் சார்ந்து இல்லாமல், இரு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்கான பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் உள்ளடக்கி உள்ளது.
இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவு, பொருளாதார ஒத்துழைப்புடன் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“சி ஜின் பிங்குடனான எனது கலந்துரையாடலை நான் நினைவில் கொண்டுள்ளேன். பொருளாதார உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீடு மட்டுமல்லாமல் அமைதியைப் பாதுகாப்பதற்கான அவசியம் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான நட்பை வலுப்படுத்துவதையும் நாங்கள் பரிமாறிக்கொண்டோம்”, என்று அவர் கூறினார்.
2025 சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சுடன் சீனாவின் பண்பாட்டு சூற்றுலா அமைச்சும் இணைந்து சனிக்கிழமை இரவு கோலாலம்பூரில் சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
சீனாவில் வசந்த கால விழாவாக அழைக்கப்படும் சீன புத்தாண்டு கொண்டாட்டம் மலேசியாவில் உள்ள பன்முக கலாச்சார சமூகத்தின் ஒற்றுமைக்குச் சான்றாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Source : Bernama
#PMAnwar
#ChineseNewYear2025
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia