சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை சந்திக்க அனுமதி

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை சந்திக்க அனுமதி

கோலாலம்பூர், 24/01/2025 : சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பிப்ரவரி முதலாம் மற்றும் இரண்டாம் தேதிகளில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மறுவாழ்வு மையம், சிறப்பு சீர்திருத்த மையம், சிறப்பு தடுப்புக் காவல் இடம் மற்றும் ஹென்றி கர்னி பள்ளி உட்பட, அனைத்து சிறைச்சாலைகளையும் உள்ளடக்கி இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பெருநாளைக் கொண்டாடும் சீனர்களுக்கு கைதிகளை சந்திக்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

காலை 8.15 முதல் மாலை மணி 4.15 வரை நேரடியாக சிறைச்சாலை கைதிகளைச் சந்திக்கலாம் என்று சிறைத்துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், பிப்ரவரி 3 தொடங்கி 5-ஆம் தேதி வரை இயங்கலை வழியான சந்திப்பும் மேற்கொள்ளப்படும்.

கைதிகளுக்கு வெளியில் இருந்து எந்தவொரு உணவு மற்றும் பானம் கொண்டுவர அனுமதி இல்லை என்று கூறிய மலேசிய சிறைச்சாலை துறை, அங்கு அனைத்து வசதிகளிலும் ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அவர்களுக்கு பணம் வழங்கவும் ஊக்குவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டது.

வருகையாளர்கள் பணம் கொடுக்க விரும்பினால், தேர்வுக்கான கட்டணம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முடியும் என்றும், அதற்கு அதிகாரப்பூர்வ ரசீதைப் பெற்றிருக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.prison.gov.my என்ற அக்கப்பத்தில் i-Visit வழியோ அல்லது சம்பந்தப்பட்ட துறைக்கு தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் அல்லது கடிதம் வழியோ முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

Source : Bernama

#ChineseNewYear
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.