டாவோஸ்[இங்கிலாந்து], 23/01/2025 : பெருநாட்கால இலவச டோல் கட்டணம் குறித்த இலக்கிடப்பட்ட அணுகுமுறையை அரசாங்கம் இன்னமும் ஆராய்ந்து வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட உதவித் தொகையைப் போலவே, பி40 மற்றும் எம்40 பிரிவினருக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்பட வேண்டுமே தவிர அனைவருக்கும் அல்ல என்று அவர் தெரிவித்தார்.
”அனைவருக்கும் ஏன் டோல் கட்டணம் இலவசம் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ், மசராட்டி போன்ற ஆடம்பர ரகக் கார்களும் இச்சலுகையைப் பெறுகின்றன. எனவே, பாதிக்கப்பட்ட அடிதட்டு மக்களைக் கருத்தில் கொண்டு இவ்விவகாரத்தை நாம் ஆராய வேண்டிய சாத்தியம் உள்ளது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மின்சாரம் மற்றும் எண்ணெய் போன்று அனைவரும் தொடர்ந்து உதவித் தொகை வழங்க முடியாது என்று கொள்கை அளவில் மட்டுமே பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறியிருந்தார்”, என்று அவர் கூறினார்.
பெருநாட்காலங்களில் இலவச டோல் சேவை வழங்கியது 2024ஆம் ஆண்டோடு நிறுத்தப்படுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அலெக்சாண்டர் நந்தா தெரிவித்திருந்தார்.
மேலும், இலக்கிடப்பட்ட அணுகுமுறையைக் கண்டறிய கடந்தாண்டில் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதோடு, அதன் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Source : Bernama
#PMAnwar
#FreeToll
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia