டாவோஸ்[சுவிட்சர்லாந்து], 23/01/2025 : சரவாக், பிந்துலுவில் பசுமை ஹைட்ரஜன் மாற்ற ஆற்றலில் முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அனைத்துலக உலோக சுரங்க நிறுவனமான ஃபோர்டெஸ்க்யூ, இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
டாவோஸ், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றம் WEF-இன் 2025ஆம் ஆண்டு உச்சநிலை மாநாட்டிற்கு வெளியில் ஃபோர்டெஸ்க்யூவின் நிர்வாகத் தலைவரும் தோற்றுநருமான டாக்டர் எண்ட்ரூ பாரஸ்ட் ஏஓ-வின் தலைமையிலான சந்திப்பில் இந்த ஒப்புதல் பெறப்பட்டதாக அவர் கூறினார்.
”சரவாக் மாநில அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டது. அதோடு, பிந்துலுவை ஒரு மையமாக மாற்றும் வகையிலான பல முயற்சிகளுக்கும் ஆதரவிற்கும் நான் உத்தரவாதம் அளித்துள்ளேன்”, என்று அவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, ஃபோர்டெஸ்க்யூ, அஸ்ட்ராசனெகா, DP World, மெட்ரானிக்ஸ், நெஸ்லே மற்றும் கூகுளைப் பிரதிநிதிக்கும், கூட்டுறவு நிறுவனத் தலைவர்களுடன், முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு மித்தி ஏற்பாடு செய்திருந்த நேரடி வணிகக் கூட்டத்தில் மலேசிய பேராளர் குழுவிற்கு தலைமையேற்ற அன்வார் கலந்து கொண்டார்.
Source : Bernama
#PMAnwar
#MalaysiaSwitzerland
#Bintulu
#Fortescue
#FortescueInvestsInMalaysia
#FortescueBintulu
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.