டாவோஸ்[சுவிட்சர்லாந்து], 23/01/2025 : ஆசியான் வட்டாரத்தின் மிகப்பெரிய வாய்ப்புகளை வலியுறுத்துவதே தமது முதன்மை தகவலாகும் என்று சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றம் WEF-இன் 2025ஆம் ஆண்டு உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டதை முன்னிட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஆசியான் 2025-இன் தலைவராக, இம்முறை WEF 2025 அமர்வில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை உள்ளிட்ட இவ்வட்டாரத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் மலேசியா வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
”இது உள்நாட்டில் (ஆசியான்) வர்த்தகம் செய்யும் அதேவேளையில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா மற்றும் பிரிக்ஸ் ஆகியவற்றுடன் ஒரு வர்த்தக சக்தியாக விளங்குகிறது”, என்றார் அவர்.
இன்று சுவிட்சர்லாந்து டாவோசில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு WEF-ஐ முன்னிட்டு அலுவல் பயணத்தை மேற்கொண்டிருந்த டத்தோ ஶ்ரீ அன்வார் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு கூறினார்.
ஏறக்குறைய 70 கோடி மக்களைக் கொண்ட ஆசியான், விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள அதேவேளையில், அந்த அமைதியான வட்டாரம் அதிகமான ஆற்றலைக் கொண்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஆற்றலைத் தவிர்த்து அடிப்படைக் கல்வி, உணவுத் தொழில்நுட்பம், ஒன்றோடு ஒன்று தொடர்பு மற்றும் இலக்கவியல் போன்றவைப் தொடர்பான பிரச்சனைகளை உட்படுத்தியும், ஆற்றல் மாற்ற விவகாரங்களில் ஆசியான் கவனம் செலுத்த விரும்புவதாக அன்வார் கூறினார்.
Source : Bernama
#PMAnwar
#MalaysiaSwitzerland
#WEF
#ASEAN
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.