கோலா நெருஸ், 22/01/2025 : ஒபிஆர் எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 3 விழுக்காட்டில் நிலை நிறுத்த பேங்க் நெகாரா மலேசியா, பிஎன்எமின், 2025ஆம் ஆண்டிற்கான நிதி கொள்கை செயற்குழு, எம்பிசியின் முதல் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது பொருளாதாரத்தின் சிறந்த வளர்ச்சியையும் வலுவான உலகளாவிய பொருளாதார வர்த்தகத்தையும் பிரதிபலிப்பதாக பிஎன்எம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டில், தொழில்நுட்ப சுழற்சியின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஆதரிக்கும் அதே வேளையில் நேர்மறையான தொழிலாளர் சந்தை, தொடரும் மிதமான பணவீக்கம் மற்றும் நிலையான பணவியல் கொள்கைகளின் மூலம் உலக பொருளாதாரம் நிலைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, மத்திய வங்கி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
மேலும், அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டு கட்டுப்பாடுகளின் நிலையற்ற தன்மையால் அதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதோடு, உயர்ந்த நிலையற்ற கொள்கைகள் நிதி சந்தைகளில் கணிசமான ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கும்.
இதனிடையே, 2024ஆம் ஆண்டில் மலேசியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருந்ததாக, பிஎன்எம் குறிப்பிட்டுள்ளது.
Source : Bernama
#BankNegaraMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.