புத்ராஜெயா, 22/01/2025 : அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் அதன் பல்வேறு பயன்பாடுகளுக்குப் குறிப்பாக அமலாக்கப் பிரிவுக்கு ஏற்புடைய தனித்துவமான 5ஜி இணைப்பைப் பயன்படுத்துவதைப் பரிசீலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
பாதுகாப்பான அலைநிரல் மற்றும் தனிநபருக்கான 5ஜி சேவையை வழங்குவது உள்ளிட்ட தேவைகளை ஆராய அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“5ஜி- இன் பாதுகாப்பான பகுதியை பயன்படுத்தி, அந்த அமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட இணைப்பை உருவாக்க முடியும். இது சட்ட அமலாக்கத்திற்கு மட்டும் இருக்க வேண்டியதில்லை. இது எந்தவொரு தொழில்துறை அல்லது நிறுவனத்திற்கும் பயன்படலாம், ” என்றார் அவர்.
இந்த விவாகரம் குறித்து தொழில்துறை தரப்புடன் விவாதித்து வருவதாகவும், தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கான கோரிக்கைகளை பெற்றுள்ளதாகவும் ஃபஹ்மி கூறினார்.
அதற்கான, பிடிஆர்எம் போன்ற பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் சிறப்புச் சேவையை உருவாக்குவதற்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி பல அணுகுமுறைகளைக் கையாளுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், வயது வரம்பின் அடிப்படையில் இணைய அணுகலைக் கட்டுப்படுத்தும் பிற நாடுகளின் நடவடிக்கைகளைப் பின்பற்ற அரசாங்கம் தற்போது எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று ஃபஹ்மி தெரிவித்தார்.
மாறாக, மலேசியா இணைய பாதுகாப்பு சிக்கல்களைக் குறிப்பாக குழந்தைகள் தொடர்புடைய பிரச்சனைகளைக் கையாளுவதில் சமநிலையான அணுகுமுறைகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் கூறினார்.
“நாங்கள் தற்போது பிற நாடுகள் செய்ததை முழுமையாக பின்பற்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை. ஆனால், நாங்கள் சமூக-பண்பாட்டின் பின்புலம் மற்றும் நாட்டில் உள்ள சட்ட மற்றும் ஒழுங்குமுறை சூழலைக் கருத்தில் கொண்டு சமநிலைப்படுத்து விரும்புகிறோம், ” என்று அவர் தெரிவித்தார்.
Source : Bernama
#FahmiFadzil
#5GNetwork
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.