லெம்பா பந்தாய், 19/01/2025 : லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் இன்று பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் கம்யூனிகேஷன் அமைச்சருமான திரு. பஃமி பட்சில் ஏற்பாடு செய்திருந்த இந்த பொங்கல் கொண்டாட்டம் பந்தாய் டாலாமில் உள்ள IWK Eco Park இல் நடைபெற்றது. பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், கலாச்சார விளையாட்டுகள் என நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.
ஒரே நாளில் மூவின மக்களின் வேவ்வேறு மங்களகரமான நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெறும் மகிழ்வு கொண்டதாக அமைச்சர் பஃமி பட்சில் தனதுரையில் கூறினார். நம் திருநாட்டில் மட்டுமே இது சாத்தியம். இளய தலைமுறை நமது பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் சுமார் 50 பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த சுமார் 200 பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Ponggal
#FahmiFadzil
#LembahPantai
#PongalInMalaysia
#PongalCelebration
#Ponggal2025
#MalaysiaMadani
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.