லங்காவி , 19/01/2025 : 2025ஆம் ஆண்டின் ஆசியானுக்குத் தலைமையேற்று உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா, குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை வலுப்படுத்தவும் வலியுறுத்துகிறது.
மலேசியா மடானியின் கொள்கைக்கு ஏற்ப வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுவதையும் மலேசியா இலக்காகக் கொண்டுள்ள நிலையில் இதில் யாரும் பின்தங்கி விடாததும் உறுதிசெய்யப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
உள்ளடக்கம், பொருளாதாரத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு விரிவுப்படும் வேளையில், வட்டார ஒருமைப்பாட்டிற்கான உறுதியைப் பிரதிபலிக்கும் வகையில், திமோர் லெஸ்தே உட்பட 11 உறுப்பு நாடுகளும் முழுமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தலைமை பொறுப்பேற்றிருக்கும் மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.
ஆசியான் 58ஆவது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில் பல நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வெளிப்படுத்துவதற்கு அதன் தலைவர்களும் மக்களும் கொண்டுள்ள உறுதியைக் காட்டுவதாக டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
Source : Bernama
#ASEAN
#MMM
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.