பழையன கழிதலும், புதியன புகுதலும் – மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

பழையன கழிதலும், புதியன புகுதலும் - மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்  பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், 13/01/2025 : தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தை முதல் நாள் தமிழர்களுக்குப் புத்தாண்டாகவும் மலர்கிறது அந்த வகையில் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பொங்கல் என்பது தமிழர்களின் முக்கிய பெருநாளாகக் கருதப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும். அதுவே அதன் தனிச் சிறப்பிற்குக் காரணம். பொங்கல் என்பது அறுவடைத் திருநாள், உழவர் திருநாள், விவசாயத்தை முதன்மையாகக் கொண்டவர்களுக்கு முக்கிய பெருநாள். தை மாதத்தில் உழவர்களால், தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, தமிழர் திருநாள் மட்டுமல்ல இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகும்.

முன்பு உலகம் முழுவதுமே விவசாயத்தை தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது அதனால் தான் பொங்கல் ஒரு தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

போகிப் பண்டிகை, வீட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் என தொடர்ச்சியாக நான்கு நாட்கள். “பழையன கழிதலும், புதியன புகுதலும்”, பொங்கல் கொண்டாட்டத்தில் முதன்மையானது, வேண்டாத பொருட்களை மட்டுமல்ல வேண்டத்தகாத எண்ணங்களையும் செயல்களையும் நாம் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே போகி கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் கொண்டாட்டங்கள் பொதுவாக வாழ்வியலை குறிப்பதாகவே அமைந்திருக்கும். “வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்..” உழைப்பை முன்னிலைப் படுத்தி வாழ்வைக் கட்டமைத்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால்தான் விவசாயிகள் உழைத்து, தங்களது உழைப்பை அறுவடை செய்யும் நாளைக் கொண்டாடக் கற்றுக்கொடுத்தார்கள். அதுவே பொங்கலாக இன்று உலகம் முழுவதும் நாம் கொண்டாடி வருகிறோம்.

நன்றி சொல்லும் வகையில் சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல். விருந்தோம்பல், சீர்வரிசை இதெல்லாம் உறவுகளை பாதுகாக்கிறது. இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. ஜல்லிகட்டு மலேசியாவில் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் தமிழ்நாட்டில் நடந்தது. மே மாதம் மலேசியாவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் திருநாளில் பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்க மனம் நிறைந்த வாழ்த்துகள். உழைக்க நாம் தயாராக இருக்கும் வரை நமக்குத் தோல்வி என்பதில்லை. உழைக்கும் வர்க்கம் தோற்றதாகச் சரித்திரம் இல்லை.

ஆக எத்தனை இன்னல் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு ஒற்றுமையாகக் கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய பொங்கல் & தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

#Pongal
#DatukSeriMSaravanan
#PongalWishes
#Pongal2025
#PongalInMalaysia
#TamilNewYear
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.