தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டுரைப் போட்டி ரி. ம. 8,100 ரொக்கப் பரிசுகள், 3 வண்ண தொலைக்காட்சி 3 மண்டலங்களாக நடுத்துகிறது தமிழ்ப்பள்ளி மாணவ உதவி நிதியம்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டுரைப் போட்டி ரி. ம. 8,100 ரொக்கப் பரிசுகள், 3 வண்ண தொலைக்காட்சி  3 மண்டலங்களாக நடுத்துகிறது தமிழ்ப்பள்ளி மாணவ உதவி நிதியம்

கோலாலம்பூர், 13/01/2025 : தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியத்தின் பொன்விழாவினை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இவ்வாரியம் ஒரு கட்டுரைப் போட்டியை நடுத்துகிறது. வெற்றிபெறும் மாணவர்களுக்கு மொத்தம் 8,100 ரொக்கப் பரிசுகளும் வெற்றிக் கோப்பைகளும், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும்.

நாடுதழுவிய நிலையில், 6ஆம் வகுப்பு மாணவர்களின் மொழித்திறன் மற்றும் சிந்தனைத் திறன், ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவினை முன்னிட்டு இப்போட்டி மூன்று மண்டலங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. இதில் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகியவை வட மண்டலமாகவும், சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், பாகாங் ஆகியவை மத்திய மண்டலமாகவும், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகியவை தென் மண்டலமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இப்போட்டியின் இறுதிச் சுற்றில் நேரடியாக வந்து கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட போக்குவரத்து செலவுத் தொகை, உணவு, சான்றிதழ் மற்றும் டீ-சட்டைகள், ரொக்கப் பரிசுகள் ஆகியவற்றை வழங்குவதற்கு மொத்தம் வெள்ளி 40,000 செலவிட இவ்வரியத்தின் அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

போட்டியின் முதல் சுற்றில் ‘எனது பள்ளியின் சிறப்பு’ அல்லது ‘நான் விரும்பும் விளையாட்டு’ என்னும் இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வுச் செய்து ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சொந்த கையெழுத்தில் A4 தாளில் இரண்டு பக்கங்களில் எழுதி 2025 பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இவ்வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் பள்ளியின் முத்திரையுடன் தலைமையாசிரியர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.  இந்த முதல் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 20 மாணவர்கள் வீதம் 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த 60 மாணவர்களும் இறுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துக்கொள்ளுமாறு அழைக்கப்படுவர். வட மண்டலத்திற்கான போட்டி கூலிமிலும், மத்திய மண்டலத்திற்கான போட்டி கோலாலம்பூரிலும், தென் மண்டலத்திற்கான போட்டி குளுவாங்கிலும் நடைபெறும். இதில் மத்திய மண்டலத்திற்கான நேரடி போட்டி எப்பரலில் நடைபெறும். அதன் பிறகு மற்ற மண்டலங்களுக்கான நேரடி போட்டிகள் நடைபெறும்.
இந்த நேரடிப் போட்டியில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் அங்கு கொடுக்கப்படும் தலைப்புகளில் ஒன்றை எழுத வேண்டும்.

வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரி. ம. 1,000.00, இரண்டாம் பரிசு ரி. ம. 700.00, மூன்றாம் பரிசு ரி. ம. 500.00. அதோடு, 5 ஆறுதல் பரிசாக ரி. ம. 100.00 வீதம் வழங்கப்படும். முதல் பரிசுகளைப் பெறும் மாணவர்களின் பள்ளிகளுக்கும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்படும். நேரடியாக போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு டீ- சட்டைகளும் சான்றிதழும் வழங்கப்படும்.

மேல் விபரம் பெற வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் (012-6589252) அல்லது அறங்காவலர் திரு. பரமசிவம் (011-35231429) ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம். கட்டுரைகளை ‘வட்சாப்’ மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்கு அனுப்பலாம் என்று தமது பத்திரிகைச் செய்தியில் வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் குறிப்பிட்டார். மின்னஞ்சல் முகவரி: tamilschoolCAF@gmail.com

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia