எஸ்.பி.எம் தேர்வு தொடர்பான எஸ்.ஓ.பி முறையே பின்பற்றப்படும்

எஸ்.பி.எம் தேர்வு தொடர்பான எஸ்.ஓ.பி முறையே பின்பற்றப்படும்

ஜோகூர் பாரு, 13/01/2025 : 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வின் வரலாற்று பாடத்தின் தேர்வுத் தாள் கசிந்ததாக கூறப்பட்ட விவகாரத்தை மறுத்த, கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான், தேர்வு தொடர்பான செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி முறையே பின்பற்றப்பட்டு வருவதாக கருத்துரைத்தார்.

”கே.பி.எம் மேற்கொண்ட விசாரணையில், வரலாற்று பாடத்திற்கான தேர்வுத் தாள் கசிவு ஏற்படவில்லை. கசிந்துள்ளது என்று குறிப்பிடும்போது முழு தேர்வு தாளும் கசிந்தது என்று தான் அர்த்தம். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள செயல்பாட்டு தர விதிமுறைகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அவை தொடர்ந்து பின்பற்றப்படுவது உறுதிச் செய்யப்படும், ” என்றார் அவர்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அனைத்து திரைப் பிடிப்புகளில் வரலாற்று பாடப் புத்தகத்திலிருந்து கணிக்கப்பட்ட தலைப்புகளின் பட்டியல் மட்டுமே இருந்ததாக கல்வி அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

எனினும், 2024 எஸ்.பி.எம்மின் வரலாற்றுப் பாடத்திற்கான முதல் மற்றும் இரண்டாவது தேர்வுத் தாள்களில் இருந்த எந்தவொரு கேள்வியும் பகிரப்பட்ட பதிவுகளில் இல்லை என்பதைக் கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.

Source : Bernama

#SPM
#SOP
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.