ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, 10/01/2025 : கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவைச் சுற்றியுள்ள பாழடைந்த பழைய வணிகப் பகுதிகளை மேம்படுத்துவதற்கு அவற்றை சோதனையிடுமாறு கோலாலம்பூர் மாநகராண்மை கழகம் டி.பி.கே.எல்-ஐ டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
நீண்ட காலமாக அப்பகுதியில் செயல்படும் கடைகள் மற்றும் கடை வரிசைகள் தலைநகரின் முக்கிய சுற்றுலா தலங்களாகும் என்பதால் அதனை பராமரிக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
சுற்றுப்பயணிகளின் வசதியை உறுதி செய்வதற்கும், அதே நேரத்தில் சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கும் fast track எனும் முறையைப் பயன்படுத்துவதன் இதற்கு தீர்வுக் காண முடியும் என்று அன்வார் விவரித்தார்.
இன்று மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை மேற்கொண்ட பின்னர்,
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவைச் சுற்றியுள்ள சில பகுதிகளை பிரதமர் சுமார் 15 நிமிடங்கள் வரை பார்வையிட்டார்.
Source : Berita
#MasjidIndia
#DBKL
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia