புக்கிட் ஜாலில், 10/01/2025 : மலேசிய பொது பூப்பந்து போட்டியின் கலப்பு அரையிறுதி சுற்றுக்கு கோ சூன் ஹுவாட் – ஷெவோன் லாய் ஜெமி (Goh Soon Huat-Shevon Lai Jemie) ஜோடி முன்னேறியது.
கணவன் மனைவி இணையரான அவ்விருவரும் காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் செங் சிங்-சாங் சி (Cheng Xing-Zhang Chi) ஜோடியை நேரடி செட்களில் வீழ்த்தினர்.
காய்ச்சலால் உடல் நலம் குன்றிய போதிலும், ஷெவோன் லாய் ஜெமி தமது 100 விழுக்காடு உழைப்பைக் கொடுத்து தமது கணவரோடு இணைந்து வெற்றியை உறுதி செய்தார்.
முதல் செட் ஆட்டத்தை 21-15 என்று 18 நிமிடங்களில் முடித்தனர்.
அதே உத்வேகத்துடன் இரண்டாம் செட்டில் களமிறங்கிய அவர்கள் 22-20 என்று ஆட்டத்தை நிறைவு செய்தனர்.
அடுத்த சுற்றில் அவர்கள், தாய்லாந்து இணையரைச் சந்திக்கவிருக்கின்றனர்.
Source : Bernama
#MalaysiaOpenBadminton
#MixedDoubles
#SemiFinals
#Entamizh
#MalaysiaNews
#EntamizhVilaiyaattu
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.