பகாங் & ஜோகூரில் ஞாயிற்றுக்கிழமை வரை ஆபத்தான கனமழை பெய்யக்கூடும்

பகாங் & ஜோகூரில் ஞாயிற்றுக்கிழமை வரை ஆபத்தான கனமழை பெய்யக்கூடும்

கோலாலம்பூர், 10/01/2025 :   பகாங் மற்றும் ஜோகூர் மாநிலங்களின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து ஆபத்தான கன மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங், ரொம்பின் பகுதியிலும், ஜோகூர் மாநிலத்தின் பத்து பகாட், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளிலும் ஆபத்தான கனமழை பெய்யும் என்று மெட்மலேசியா அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறது.

பகாங்கில் பெரா மற்றும் பெக்கான் ஆகிய பகுதிகளிலும், ஜோகூரில் தங்காக், சிகாமாட் மற்றும் மூவார் ஆகிய பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்யும் என்று அந்த மையம் கூறியது.

திரெங்கானுவில், ஹுலு திரெங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமானிலும், பகாங் ஜெராந்துட், மாரான் மற்றும் குவாந்தானிலும் எச்சரிக்கை நிலையிலான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானின் கோலா பிலா, ஜெம்போல் மற்றும் தம்பின் பகுதியிலும் அதே வானிலை நிலவும்.

Source : Bernama

#Rain
#PahangJohorRain
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.