பினாங்கு: 6 ஆண்டுகளில் 129 வழிப்பாட்டுத் தலங்களுக்கு நிலம்

பினாங்கு: 6 ஆண்டுகளில் 129 வழிப்பாட்டுத் தலங்களுக்கு நிலம்

ஜார்ஜ்டவுன், 25/12/2024 : 2018-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு வரையில், பினாங்கில் உள்ள இஸ்லாம் அல்லாத 129 வழிப்பாட்டுத் தலங்களுக்கு அம்மாநில அரசாங்கம் நிலம் வழங்கியுள்ளது.

இதர மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களும் முன்னேற்றம் அடையும் பொருட்டு, மாநில அரசாங்கத்தின் முழு ஆதரவை பெற்றுள்ளதை உறுதி செய்வதற்கான, நடவடிக்கை அதுவென்று, முதலமைச்சர் சோவ் கோன் இயோவ் தெரிவித்தார்.

2028-ஆம் ஆண்டு வரை வழிபாட்டுத் தலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மாநில ஒருமைப்பாட்டு அரசாங்க தேர்தல் வாக்குறுதியின் வழி ஒரு கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் சோவ் கூறினார்.

மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் மாநில அரசாங்கம் எப்போதும் அக்கறையையும் முன்னுரிமையையும் கடைப்பிடிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு தனிநபரும் அந்தந்த நடைமுறைகள் மற்றும் நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அடிப்படை சேவை உட்பட வசதிகளை வழங்குவதில் தமது நிர்வாகம் பாகுபாடற்ற பொறுப்பைக் கொண்டிருப்பதாக சோவ் தெளிவுபடுத்தினார்.அமலாக்கம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மீது எஸ்.பி.ஆர்.எம் கவனம் செலுத்தும்

புத்ராஜெயா, 26/12/2024 : 2025 ஆம் ஆண்டில் கொள்முதல், அமலாக்கம் மற்றும் மிகப் பெரிய ஊழல் நடவடிக்கைகள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் கவனம் செலுத்தும்.

இதம் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, கசிவுகளை குறைப்பதுடன் , ஊழலின் மூலம் திசை திருப்பப்பட்ட நாட்டின் சொத்துகளையும் பணத்தையும் மீட்க முடியும் என்று எஸ்.பி.ஆர்.எம் நம்பிக்கைக் கொண்டுள்ளது.

எஸ்.பி.ஆர்.எம்மில் உள்ள ஓவ்வோர் அமைப்பிலும் பணிகள் செழுமையாக நடைபெறவதற்கு ஏதுவாக அந்த ஆணையம் தனது பணி அமைப்புகளிலும் அணுகுமுறைகளிலும் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறியுள்ளார்.

எஸ்.பி.ஆர்.எம் சொகுசான வேலை சூழலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேலை செய்வதிலும் சிந்தனை முறையிலும் புதிய அணுகுமுறை தேவைப்படுவதாக அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்

இந்த மாற்றம் ஆணையத்தின் செயல்திறன் மற்றும் நிபுணத்துவத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதோடு, தொழில் அடிப்படையில், அதிகாரிகள் சிறந்த முறையில் பணியாற்றுவதை உறுதி செய்வதாக அசாம் பாக்கி மேலும் கூறினார்.

அதோடு, ஊழல் சார்ந்த குற்றவாளிகள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, விசாரணை மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க எஸ்.பி.ஆர்.எமுக்கு அரசாங்கம் முழு சுதந்திரம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Source : Bernama

#Penang
#WorshipPlace
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia