அமலாக்கம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மீது எஸ்.பி.ஆர்.எம் கவனம் செலுத்தும்

அமலாக்கம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மீது எஸ்.பி.ஆர்.எம் கவனம் செலுத்தும்

புத்ராஜெயா, 26/12/2024 : 2025 ஆம் ஆண்டில் கொள்முதல், அமலாக்கம் மற்றும் மிகப் பெரிய ஊழல் நடவடிக்கைகள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் கவனம் செலுத்தும்.

இதம் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, கசிவுகளை குறைப்பதுடன் , ஊழலின் மூலம் திசை திருப்பப்பட்ட நாட்டின் சொத்துகளையும் பணத்தையும் மீட்க முடியும் என்று எஸ்.பி.ஆர்.எம் நம்பிக்கைக் கொண்டுள்ளது.

எஸ்.பி.ஆர்.எம்மில் உள்ள ஓவ்வோர் அமைப்பிலும் பணிகள் செழுமையாக நடைபெறவதற்கு ஏதுவாக அந்த ஆணையம் தனது பணி அமைப்புகளிலும் அணுகுமுறைகளிலும் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறியுள்ளார்.

எஸ்.பி.ஆர்.எம் சொகுசான வேலை சூழலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேலை செய்வதிலும் சிந்தனை முறையிலும் புதிய அணுகுமுறை தேவைப்படுவதாக அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்

இந்த மாற்றம் ஆணையத்தின் செயல்திறன் மற்றும் நிபுணத்துவத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதோடு, தொழில் அடிப்படையில், அதிகாரிகள் சிறந்த முறையில் பணியாற்றுவதை உறுதி செய்வதாக அசாம் பாக்கி மேலும் கூறினார்.

அதோடு, ஊழல் சார்ந்த குற்றவாளிகள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, விசாரணை மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க எஸ்.பி.ஆர்.எமுக்கு அரசாங்கம் முழு சுதந்திரம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Source : Bernama

#SPRM
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia