கோலாலம்பூர், 27/12/2024 : மலேசியாவின் வளமான எதிர்காலத்தை உருவாகுவதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்.
ஏழ்மையில் உள்ளவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், நகர் மற்றும் புறநகர் என்று எவரும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சியை அரசாங்கம் இதுவரை வகுத்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாண்டு முழுவதும் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் மடானி அரசாங்கத்தின் ஒவ்வொரு முயற்சியிலும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கே முன்னுரிமை வழங்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஈராண்டுகளில், மக்கள் மற்றும் நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் மடானி அரசாங்கம் பல முயற்சிகளைச் செயல்படுத்தியுள்ளது.
அதில், ரஹ்மா உதவி தொகை STR, பி40 பிரிவைச் சேர்ந்த 90 லட்சம் பேருக்குப் பயனளித்துள்ளதை அன்வார் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மக்களுக்கு மிகவும் அர்த்தமுள்ள மற்றும் நெறி நிறைந்த வாழ்க்கையை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
Source : Bernama
#Anwar
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia