என் தமிழ்

தொடங்கிய முதல் நாளே MYSAWASDEE சிறப்பு இரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு

பட்டர்வொர்த், 29/12/2024 – பட்டர்வொர்த் நிலையத்திலிருந்து தாய்லாந்து, ஹாட் ஞாய்க்கும் அங்கிருந்து பட்டர்வொர்த்திற்கும் திரும்பும் MySawasdee சிறப்பு இரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.

இந்நிலையில், முதல் நாளே அச்சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, டிக்கெட்டுகள் எழுபது விழுக்காடு விற்றுத் தீர்ந்துள்ளதாக KERETAPI TANAH MELAYU நிறுவனம் KTMB-இன் அனைத்துலக விவகாரங்களுக்கான சிறப்பு பணித் தலைவர் ரோஷிடி யாஹ்யா தெரிவித்தார்.

அடுத்த ஜனவரி 5ஆம் தேதி வரை சோதனைப் பயணத்தில் செயல்படும், இச்சேவையின் ஒவ்வொரு பயணத்திற்கும் 360 இருக்கைகள் இருக்கும் என்று அவர் கூறினார்.

இன்று, பட்டர்வொர்த் நிலையத்தில் முதலாவது சிறப்பு இரயில் புறப்பட்ட பின்னர் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

புக்கிட் மெர்தாஜம், சுங்கைப் பட்டாணி, அலோர் ஸ்டார், பாடாங் பெசார் உள்ளிட்ட பல முதன்மை ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஒரு வழிப் பயணத்திற்கு 45 ரிங்கிட் கட்டணத்தில, நாள்தோறும் இந்த சிறப்பு ரயிலின் சேவை இருக்கும் என்று ரோஷிடி தெரிவித்தார்.

Source : Bernama

#MySawasdee
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Scroll to Top