ஜெஜு ஏர் விமானம் சுவரை மோதி விபத்து; 151 பேர் உயிரிழப்பு

ஜெஜு ஏர் விமானம் சுவரை மோதி விபத்து; 151 பேர் உயிரிழப்பு

முவான்[தென் கொரியா], 29/12/2024  : தென் கொரியாவில் உள்ள முவான் அனைத்துலக விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 151 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு தீயணைப்புத்து துறை குறிப்பிட்டுள்ளது.

இவ்விபத்தில் இரண்டு விமானப் பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் காயங்களுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி சுவர் ஒன்றில் மோதியதில் சம்பந்தப்பட்ட விமானம் உடைந்து வேகமாக தீப்பிடித்து வெடித்தது.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர்  7C2216 விமானம் தென் கொரியாவில் உள்ள விமான நிலையத்தில் காலை மணி 9-க்கு தரையிறங்கும் வேளையில் இவ்விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

இவ்விபத்தைத் தொடர்ந்து விமானத்தில் உள்ளவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சுமார் 30 ஆண்டுகளில் தென் கொரிய விமான நிறுவனம் தொடர்பான விபத்துகளில் இதுவே மிகவும் மோசமானதாக அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

Source : Bernama

#7C2216
#FlightAccident
#SouthKoreaFlightAccident
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia