தென் சீனக் கடல் சர்ச்சை; மோதல்களைக் களைய ஆசியானும் சீனாவும் ஒருமித்த கருத்து

தென் சீனக் கடல் சர்ச்சை; மோதல்களைக் களைய ஆசியானும் சீனாவும் ஒருமித்த கருத்து

வியன்டியான், 11/10/2024 : தென் சீனக் கடல் சர்ச்சைகளுக்கான மோதல்களைக் களைய ஆசியானும் சீனாவும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன.

44 மற்றும் 45வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது ​​சீனாவும், அதைச் சுற்றியுள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் அரச தந்திர வழிகள் மற்றும் அது குறித்த பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி நீர்நிலைகளில் உள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காண இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

உச்சநிலை மாநாட்டின் இறுதிநாளான இன்று, லாவோஸ், வியன்டியானில் மலேசிய செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அவ்வாறு கூறினார்.

Source : Bernama

#ASEAN
#China
#Anwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.