புத்ராஜெயா, 09/10/2024 : A, B மற்றும் C கிரேட் கோழி முட்டைகளுக்கான கையிருப்பு சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றுக்கு உதவித் தொகை வழங்குவது குறித்து விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு KPKM மதிப்பாய்வு செய்யும்.
இந்நடவடிக்கை அவசியம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறிய KPKM அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு , அவ்வாறு செய்வதன் வழியாக சேமிக்கப்பட்ட தொகை, தேவைப்படும் இதர விவசாய உணவுத் துறைகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் பரிசீலிக்க, அந்த பரிந்துரை, நிதியமைச்சு, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, KPDN-னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சாபு குறிப்பிட்டார்.
ஒப்புதல் கிடைத்தால், முட்டைக்கான உதவித் தொகை நிறுத்தப்படுவதும் அமல்படுத்தப்படும்.
”சமர்ப்பிக்கப்பட்டு விட்டது, இப்போது பரிசீலனையில் உள்ளது, ஏனெனில், நாங்கள் கோழிக்கான உதவித் தொகையைத் திரும்பப் பெறும்போது, அது நிலையானதாகத் தெரிகிறது, காரணம் நாங்கள் கோழி மற்றும் முட்டைகளுக்கு 300 கோடிக்கும் அதிகமாக செலவிடுகிறோம். நாங்கள் அதை நிறுத்தும்போது விலை நிலையாக இருந்தது. அதேப்போல் முட்டைகளின் விலையுல் ஒரே நிலையில் இருப்பதை நாங்கள் நம்புகிறோம்”, என்றார் அவர்
கோழிக்கான மானியத்தை நிறுத்தினால் மாதம் 10 கோடி ரிங்கிட்டை சேமிக்க முடியும் என்று அவர் நம்புகின்றார்
Source : Bernama
#EggSubsidy
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia