வியன்டியன், 09/10/2024 : வட்டாரத்தில் பிளவை ஏற்படுத்தும் பரிந்துரைகளை நிராகரிக்குமாறு ஆசியான் உறுப்பு நாடுகளை மலேசியா வலியுறுத்துகிறது.
இக்குழு தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான செய்தியை உலகிற்கு தெரிவிப்பதில் ஆசியான் உறுதியாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
வட்டாரத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்வதில் ஆசியான் முக்கிய உந்து சக்தியாகவும் செயலாற்ற வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
”இந்த வகையில், ஆசியான் தயங்காமல், உறுதியுடன் உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புவதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வட்டாரத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கிய உந்து சக்தியாகச் செயலாற்ற வேண்டும்”, என்றார் அவர்.
புதன்கிழமை, லாவோஸ், வியன்டியனில் நடைபெற்ற 44-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் கலந்துரையாடலில் அன்வார் அவ்வாறு தெரிவித்தார்.
வட்டாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி, அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஏற்ப, பங்காளிகளுடன் உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவது ஆசியானுக்கு முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த ஆண்டு ஜனவர் முதலாம் தேதி தொடங்கி மலேசியா, ஆசியான் தலைவர் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்கவுள்ளது.
Source : Bernama
#ASEAN
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia