காஜாங், 07/10/2024 : நாடு தழுவிய அளவில் இவ்வாண்டு முதலாம் ஆண்டில் பயிலும் ஒரு லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் 3M எனப்படும் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணக்கிடுதலில் போதுமான திறனைக் கொண்டிருக்கவில்லை.
கொவிட் 19 நோய்த்தொற்று காலக்கட்டத்தில் இடைநிற்றல், ஏழ்மை மற்றும் சிறப்புத் தேவையைக் கொண்டிருக்கும் சிறுவர்கள் போன்றோர், அதற்கான காரணங்களில் அடங்குவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
“மாநில மற்றும் கூட்டரசு அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஆளுமையின் பயனாக இந்த எண்ணிக்கை மாறும் என்று நான் நினைக்கின்றேன்,” என்றார் அவர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட எழுத்தியல் மற்றும் எண்ணியல் திட்டம், மாணவர்கள் 3M திட்டத்தில் திறன்மிக்கவர்களாக மாறுவதற்கு உதவும் வகையில் அமல்படுத்தப்பட்டது.
இதைத் தவிர்த்து 250 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் ஆலோசனை ஆசிரியர் என்ற இலக்கை அடைய முடியும் என்பதை கல்வியமைச்சு உறுதி செய்யும் பணியில் களமிறங்கி உள்ளதையும் ஃபட்லினா சுட்டிக்காட்டினார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் கல்வியமைச்சின் ஏற்பாட்டில், இன்று நடைபெற்ற கல்வி சீர்திருத்த நிர்ணய திட்ட நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, ஸ்பைடர் இசைக்குழுவின் பாடகர்களின் பிள்ளைகளை உட்படுத்தி, கோலாலம்பூரில் உள்ள தங்கும் விடுதிப் பள்ளியில் நிகழ்ந்த பகடிவதை குறித்தும் அவரின் வினவப்பட்டது.
“எனவே, அக்காரணத்திற்காக, பள்ளி சுற்றுச்சூழல் அமைப்பு பாதுகாப்பாக இருப்பதை அதன் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதை நான் நினைவூட்டுகிறேன். இவ்விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரத்தில் முழு விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பை நாங்கள் அதிகாரிகளிடம் விட்டு விடுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia