கெடா, 07/10/2024 : கூலிமில் உள்ள தாமான் டெக்னோலோஜி திங்கி கூலிம், கே.எச்.தி.பி-இன், தேவையைப் பூர்த்தி செய்ய திறன்மிக்க ஆள்பல தேவையை ஒருங்கிணைக்க அரசாங்கம் நிரந்தர செயலகத்தை உருவாக்கவிருக்கிறது.
சம்பந்தப்பட்ட தொழில்துறை பகுதியில், அந்நிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எழுப்பும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அமைச்சரவை அந்நடவடிக்கையை முடிவு செய்ததாக துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அதில் முதன்மை பிரச்சனை திறன்மிக்க மற்றும் நிபுணத்துவ தொழிலாளர் பற்றாக்குறையாகும்.
இரண்டு வாரத்தில், சம்பந்தப்பட்ட அவ்விவகாரத்திற்கு தீர்வுகாண சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“அதில் ஒன்று, கே.எச்.டி.பி-இல் ஒவ்வொரு தொழில்துறைக்கான ஊழியர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய திறன்மிக்க ஆள்பல தேவையை ஒருங்கிணைப்பதற்கு நாங்கள் நிரந்தர செயலகத்தைத் திறக்கவிருக்கிறோம்,“ என்றார் டாக்டர் சாஹிட்.
இன்று, கூலிமில் உள்ள கே.எச்.தி.பி-க்கு அலுவல் பயணம் மேற்கொண்டபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia