ஆசிரியர் பயிற்சி கழகங்களில், சீன மற்றும் தமிழ் மொழிப் பயிற்சிகளுக்கும் கூடுதல் இடம் வழங்கப்படும் – பிரதமர்

ஆசிரியர் பயிற்சி கழகங்களில், சீன மற்றும் தமிழ் மொழிப் பயிற்சிகளுக்கும் கூடுதல் இடம் வழங்கப்படும் - பிரதமர்

சுங்கை சிப்புட், 06/10/2024 : ஆசிரியர் பயிற்சி கழகங்களில் தேசிய மொழியைத் தவிர்த்து, சீன மற்றும் தமிழ் மொழிப் பயிற்சிகளுக்கும் கூடுதல் இடம் அதிகரிக்கப்படுவதற்கு, அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அப்பாடங்களுக்காக அதிகமான ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் பயிற்சி பெற்று, தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பப்படலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

”ஆசிரியர் பயிற்சி கழகங்களில் கூடுதல் இடம் வழங்கக் கல்வி அமைச்சு ஒப்புக்கொண்டது. தேசிய மொழியைத் தவிர்த்து சீன மற்றும் தமிழுக்கும் கூடுதலாகக் கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் அதிகமான ஆசிரியர்கள் கல்வியமைச்சால் பயிற்சி பெற்று தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள்,”

அதேவேளையில், தேசியப் பள்ளிகளில் பயிலும்ம் சீன மற்றும் இந்திய மாணவர்களை தமிழ் மற்றும் சீன மொழிளை கற்க அனுமதிக்கவும் கல்வி அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது.

அதன் மூலம், தங்களின் தாய்மொழிகளை அவர்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

இன்று, பேராக் சுங்கை சிப்புட்டில், ஈவுட் தமிழ்ப்பள்ளியை திறந்து வைத்து உரையாற்றும்போது பிரதமர் அவ்வாறு கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், இடைநிலைப் பள்ளி அளவில் தமிழ் மற்றும் சீன மொழியைத் தொடர்ந்து கற்க விரும்பும் மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

”மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் இடைநிலைப் பள்ளி அளவில் தமிழ் மொழியைக் கற்கும் நடவடிக்கை தொடர்வதை அமைச்சும் அரசாங்கமும் வரவேற்கின்றன. எண்ணிக்கை போதுமானதாக இருந்தால் அவர்களுக்கு ஒரு வகுப்பில் இடம் வழங்கப்பட வேண்டும். இந்த வட்டாரத்தில் பொருளாதார மொழியாக மாறியுள்ளதால், மாண்டரின் ஆசிரியர்களுக்கும் நாங்கள் இன்னும் அதிக பயிற்சி அளிக்கிறோம்,” என்றார் அவர்.

இந்த முயற்சியை கட்டம் கட்டமாக மேற்கொண்டு, அதன் இலக்கை அடைய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Source : Bernama

#Anwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia