ஆயர் குரோ, 06/10/2024 : மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவுடன் இணைந்து மலாக்கா மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும், Melaka Explorace எனும் புதையல் தேடும் போட்டி அடுத்தாண்டும் தொடரப்படும்.
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு அடுத்தாண்டு திட்டமிடப்படப்பட்டிருக்கும் Melaka Explorace போட்டி கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்படும் என்று Datuk Seri Ab Rauf கூறினார்.
இன்று, மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில், 2024 Melaka Explorace நிகழ்ச்சியை நிறைவு செய்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பெர்னாமா தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சூன் வாய், தலைமை செயல்முறை அதிகாரி நூலுல் ஹஃபிடா கமாலுடின் மற்றும் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதனிடையே, 2024 மலாக்காவுக்கு வருகை புரியும் ஆண்டு வரும் டிசம்பரில் நிறைவடையும் என்று மாநில முதலமைச்சர் அவர் தெரிவித்தார்.
இது அடுத்த ஆண்டு தொடரப்படாவிட்டாலும், சுற்றுலா நடவடிக்கைகள் குறித்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர்,
2025ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் உலக சுற்றுலா தினம் WTD மற்றும் உலக சுற்றுலா மாநாடு WTC ஆகியவற்றை மலாக்கா ஏற்று நடத்தும் என்று தெரிவித்தார்.
”மாநிலத்தை உலக அளவில் விளம்பரப்படுத்தும் இந்த வாய்ப்பை மலாக்கா பயன்படுத்திக் கொள்கிறது. மேலும், 2026-இன் மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டை மலாக்கா இணைந்து ஏற்பாடு செய்யும். எனவே, சுற்றுலாத் துறை தொடர்ந்து வளர்ச்சியடையும் மற்றும் இந்தப் பெரிய நிகழ்ச்சிகளுடன் இணைந்து நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் உற்சாகமாக இருக்கும். மலாக்கா எப்போதும் தயார்” என்றார் அவர்.
மேலும், 2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டின் தொடக்க விழாவை மலாக்காவில் ஏற்பாடு செய்வதற்கு மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 2024 மலாக்காவுக்கு வருகை புரியும் ஆண்டு வரும் டிசம்பரில் நிறைவடையும் என்று மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் தெரிவித்தார்.
இது அடுத்த ஆண்டு தொடரப்படாவிட்டாலும், சுற்றுலா நடவடிக்கைகள் குறித்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர்,
2025ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் உலக சுற்றுலா தினம் WTD மற்றும் உலக சுற்றுலா மாநாடு WTC ஆகியவற்றை மலாக்கா ஏற்று நடத்தும் என்று தெரிவித்தார்.
மேலும், 2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டின் தொடக்க விழாவை மலாக்காவில் ஏற்பாடு செய்வதற்கு மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia