48 கோடியே 10 லட்சம் மதிப்பிலான வெள்ளத் தடுப்பு திட்டத்திற்குப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் – ரமணன்

48 கோடியே 10 லட்சம் மதிப்பிலான வெள்ளத் தடுப்பு திட்டத்திற்குப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் - ரமணன்

சுங்கை பூலோ, 05/10/2024 : கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையினால் சுங்கை பூலோ, பாயா ஜெராஸ் வட்டாரத்தில் இதுவரை ஆயிரத்து 200 குடும்பங்களைச் சேர்ந்த 5,500 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ளனர்.

சுமார் 800 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வரும் காலத்தில் அங்கு வெள்ளத்தை தடுக்கு முயற்சியாக, தாம் மேற்கொள்ளவிருக்கும் 48 கோடியே 10 லட்சம் மதிப்பிலான சுங்கை டமான்சாரா வெள்ளத் தடுப்பு திட்டத்திற்குப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ ரமணன் உறுதிப்படுத்தினார்.

”இரண்டு திட்டங்கள் இருக்கு. ஒன்று சுங்கை டமான்சாரா வெள்ளத் தடுப்பு திட்டம். இரண்டாவது, வெள்ளத் தடுப்பு திட்டம் சுங்கை பூலோ தவணை இரண்டு. இரண்டுமே தேவைப்படுது. அந்த இரண்டு வெள்ளத் தடுப்பு திட்டத்தைச் செய்தால் வெள்ள பிரச்சனை முற்றிலும் நிறுத்தப்படும். ஆனால், சிக்கல் என்னவென்றால் இப்பொழுது தான் சுங்கை டமான்சாரா வெள்ளத் தடுப்பு திட்டம் 48 கோடியே 10 லட்சத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்”, என்று அவர் கூறினார்.

Source : Bernama

#Anwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia