தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் – பிரதமர்

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் - பிரதமர்

புத்ராஜெயா, 30/09/2024 : பயங்கரவாதம் மற்றும் வெளிப்புற தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும், தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கின்றார்.

தற்போது நடப்பிலுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை மேம்படுத்தும் விவகாரத்தை அரச மலேசிய போலீஸ் படை, மலேசிய இராணுவப் படை மற்றும் சம்பந்தப்பட்ட இதர அமலாக்க நிறுவனங்களிடமே விட்டுவிடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனநாயக செயல்முறையில், நாடு இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கூறிய அன்வார், மலேசியாவைப் பயங்கரவாத பிரிவுகளின் களமாகவும் தளமாகவும் மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், சட்டத்தை மேம்படுத்துவது மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துவதற்கு அல்ல.

மாறாக, எந்தவொரு பயங்கரவாத கூறுகளும், தொடர்ந்து பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் அது மேம்படுத்தப்படும் என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia