செமினி, சமுதாயச் சிந்தனை மன்றத்தின் 67 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம்

செமினி, சமுதாயச் சிந்தனை மன்றத்தின் 67 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம்

செமினி, 30/09/2024 : செமினி, சமுதாயச் சிந்தனை மன்றத்தின் 67 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம் மற்றும் 1000 துளசி செடிகள் நடும் விழா 29/09/2024 காலை 07.00 மணி தொடங்கி மதியம் வரை, செமினி, சமுதாயச் சிந்தனை மன்றத்தின் (செம்மை) ஏற்பாட்டில், ரிஞ்சிங் மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவினை, தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின், தலைமை நிர்வாகி மதிப்புமிகு டத்தோ பா. சகாதேவன் அவர்கள், சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியினை திறந்து வைத்தார்.

இவ்விழாவில் பல சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

* பாலர் மற்றும் ஆரம்பத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி.

* துளசி நடும் அடையாள நிகழ்ச்சி

* நடமாடும் மருந்தக, மருத்துவப் பரிசோதனை

* நூல் நிலைய உறுப்பினர் பதிவு.

* பெரியோர்களுக்கான Sukanika போட்டி.

* கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி. ( சுதந்தின கவிதைகள்)

* அதிஸ்டக் குலுக்கு.

* இளந்தளிர்களின் பாடல் நிகழ்ச்சி.

* திரைப்படக் கலைஞர் Danny யின் சிறப்பு வருகையும், அவரின் ஜனவரி மாதத்தில் வெளியிடப் போகும் “தமிழ் ஸ்கூல் பசங்க” திரைப்படத்தின் அறிமுகமும்.

* வழை இலையில் சுவைமிக்க மதிய உணவும்.

* B40 அல்லது Peka வின் பதிவு.

என நிகழ்ச்சிகள் களைக்கட்டின. சுற்றுவட்டாரப் பொது மக்களின் நிகழ்ச்சிகான வருகை பெரும் வரவேற்பாக அமைந்திருந்தது.

800 முதல் 1000 பேருக்கு மேல் நிகழ்ச்சிக்கு மக்கள் திரண்டு வருகை தந்திருந்தார்கள்.

” செம்மை” இயக்கத்தின் தலைவர் திரு. சு.மா. செல்வா ( செல்வராஜ் வெஸ்ட்). செம்மை இயக்கத்த்தின் நோக்கங்களையும் அதன் அடுத்தக் கட்ட செயல்பாடுகளையும் தமதுரையில் எடுத்துரைத்தார்.

பல சமூக இயக்கங்கள் இணைந்தால் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இந்த நிகழ்ச்சியின் வெற்றி குறிப்பிடுகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்குப் பல தயாளச் சிந்தனைமிக்கவர்கள் பண உதவிகளையும், பொருள் உதவிகளையும், உடல் உழைப்பையும் வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மதிய உணவுக்கான அத்தனை தயாரிப்புக்களையும் கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதோடு, சுமார் 50 பேருக்கு மேல் உணவு தயாரிப்பில் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

செந்தூல் வாலிபர் சங்கம் மற்றும் தேசிய கோ.சாரங்கபாணி சமுக இயக்கம் பெரும் துணைப் புரிந்ததாக திரு. செல்வா குறிப்பிட்டார்.

எழுத்தாளர்கள் எம்.கருணாகரன், பச்சைபாலன் இன்னும் சில எழுத்தாளர்களும் நூல்களை வழங்கி அதனை பரிசுகளாக வழங்குவதாக அவர் சொன்னார்.

செம்மை இயக்கத்தின் தலைவர் சு.மா. செல்வா குறிப்பிட்ட முக்கியமான சில திட்டவரையரைகள். செம்மை இயக்கத்தின் தொடர் திட்டங்கள்.

1. அமரர் எழுத்தாளர் நா.ஆ.செங்குட்டவன் அவர்களின் கனவு திட்டமான ” உலக நூல் நிலையம்”
2. புத்தகம் வாசிக்கும் நடவடிக்கைகள். குறிப்பாக நூல் நிலையங்களில் இந்தியர்கள் உறுப்பினராக உதவும் திட்டங்கள்.
3. தமிழின் இயல், இசை, நாடகம் ஆகிவற்றின் அடிப்படையில் செயல் திட்டங்கள்.
4. செம்மை இயக்கத்தின் மாத இதழ்.
5. தாய் மொழி வகுப்புக்கள்( தமிழ்,தெலுங்கு, மலையாளம்) ஆகிய மொழி வகுப்புகள்.
6. இயற்கையை நேசிக்கும் வரையரை திட்டங்கள்.

இப்படியான செயல் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில், தேசிய நிலநிதி கூட்டறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி பெருமைக்கூரிய டத்தோ. பா. சகாதேவன் அவர்கள், மிக சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்து இந்த விழா வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

குறிப்பாக ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி தலைமையாசியர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள். ரிஞ்சிங் தோட்ட மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். செம்மை இயக்கத்தையும் அவ்வியக்கத்தோடு ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்து பொது இயக்கங்களுக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அரங்கம் நிறைந்த இந்திய சமுதாயத்தின் வருகை கண்டு மிக மகிழ்ச்சியை அவர் தெரிவித்தார்.

இவ்வட்டாரத்தில் இயங்கும் நான்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு, தலா 400 முதல் 500 துளசி செடிகள் வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு. சு.மா. செல்வா தெரிவித்தார்.

துளசி செடிகள் எப்போதும் நாம் சுவாசிக்கும் காற்றை வழங்கும் சக்தி கொண்ட செடி என்ற விளக்கத்தையும் அவர் விளக்கினார்.

ஒரு தமிழ் திருவிழா போல நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ” செம்மை” அமைப்புக்கு நமது மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

News & Photos : எம்.கருணாகரன்