புத்ராஜெயா, 30/09/2024 : அக்டோபர் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2025 வரவு செலவுத் திட்டம் ஏழைகளுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.
மேலும், பணக்காரர்களுக்கு உதவித் தொகை வழங்குவது நிறுத்தப்படும் என்றும் குறிப்பாக கல்வித் துறையில் அது மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.
இலக்கிடப்பட்ட குழுக்களுக்கு போதிய நிதி விநியோகத்தை உறுதி செய்வதற்கும் உதவித் தொகை வழங்குவதில் ஏற்படும் கசிவை நிறுத்துவதற்கும் இதில் கவனம் செலுத்தப்படும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
”உயர்தட்டு மக்கள், மூத்த அரசாங்க ஊழியர்கள், வணிகத் தலைவர்கள் அனைவரும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் சிறந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இது உண்மையில் எங்களை மிகவும் நியாயமற்ற சூழ்நிலைக்குத் தள்ளுகிறது,” என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் பொருளாதார அமைச்சு ஏற்பாடு செய்த வறுமையை ஒழித்தல் 2024 தேசிய மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றும்போது அன்வார் அவ்வாறு கூறினார்.
பணக்காரர்களுக்கான உதவித் தொகையை நிறுத்துவதன் மூலம் ஏழைகளுக்கு, குறிப்பாக புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான உதவித் தொகையை அதிகரிக்க முடியும் என்று அவர் விளக்கினார்.
Source : Bernama
#Anwar
#Budget2025
#MalaysiaBudget2025
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia