அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி MA63-இல் இடம்பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றவில்லை – பிரதமர்

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி MA63-இல் இடம்பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றவில்லை - பிரதமர்

கூச்சிங், 29/09/2024 : MA63 எனப்படும் 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்ற ஒருமைப்பாட்டு அரசாங்கம் உறுதியளித்திருப்பது, அச்சுறுத்தல்களுக்கோ அல்லது சரவாக் மற்றும் சபா மாநில அரசாங்கத்தின் ஆதரவை இழகக்கூடும் என்ற அச்சத்திலோ அல்ல.

மாறாக, அது முந்தையத் தலைவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் உறுதிப்பாடாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று, சரவாக்கில், Kapit மக்கள் தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.

1963ஆம் ஆண்டில் மலேசியாவை உருவாக்கும் முயற்சியை முன்னெடுத்த Tun Datuk Patinggi Temenggung Jugah Anak Barieng உட்பட நாட்டின் தலைவர்களின் போராட்டாங்களையும் இந்நிகழ்ச்சியில் அவர் நினைவு கூர்ந்தார்.

மாநிலம் மற்றும் நாட்டை நேசிக்கும் பண்பை கொண்ட Tun Jugah போன்றோரை வருங்கால தலைமுறையினர் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

MA63 பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இதுவரை 11 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ள வேளையில், அவற்றில் 7 அன்வாரின் தலைமைத்துவத்தின் கீழ் இரண்டு ஆண்டு காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.