பாங்கி, 26/09/2024 : சிறப்பு முகப்பு மூலம் வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் கொண்டு வரும் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐம்பது அமலாக்க அதிகாரிகள் மீதான விசாரணை நிறைவடையும் தருவாயில் உள்ளதாக டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
இவ்விவகாரத்தில் எந்தவொரு குற்றச்சாட்டும் உள்ளதா இல்லையா என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
’50 அமலாக்க அதிகாரிகளை உட்படுத்திய விசாரணை நாங்கள் நிறைவு செய்து வருகிறோம். குற்றச்சாட்டுகள் உள்ளதா இல்லையா என்பதை நான் பின்னர் அறிவிக்கும் வரையில் காத்திருங்கள். அதேவேளையில், இவ்வழக்கு குறித்த பல்வேறு பணிகளை எனது அதிகாரிகள் பூர்த்தி செய்து வருகின்றனர். தற்போது நிறைவு செய்ய வேண்டிய அம்சங்களில் ஒன்று இவ்வழக்காகும்.’ என்றார் அவர்.
அதேவேளையில், வரி செலுத்தத் தவறிய GISBH Holding நிறுவனத்திற்கு எதிராக எஸ்பிஆர்எம் விசாரணை நடத்துமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அக்குழு விசாரணையில் எஸ்பிஆர்எம் தலையிடாது என்றும் அவ்வழக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Source : Bernama
#MalaysiaNews
#LatestNews
#Malaysia