தேசிய பேரிடர் நிர்வாகக் கொள்கையை ‘NADMA’ அறிமுகப்படுத்தும்

தேசிய பேரிடர் நிர்வாகக் கொள்கையை 'NADMA' அறிமுகப்படுத்தும்

கோலாலம்பூர், 26/09/2024 : பருவமழை மாற்ற காலத்தை எதிர்கொள்ளும் ஓர் ஆயத்த நடவடிக்கையாக தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், ‘NADMA’ தேசிய பேரிடர் நிர்வாகக் கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.

குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் மோசமான வானிலையால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள, நாடு தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த கொள்கை அமைவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு மேம்பாட்டு துறையிலும் பேரிடர் அபாயக் குறைப்பு DRR அம்சத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பேரிடர் ஆபத்தைக் குறைப்பதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, தேசிய பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் தலைவருமான அவர் கூறினார்.

அதேவேளையில் அரசாங்கம், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு இடையே விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் DRR கவனம் செலுத்துகிறது.

வருங்காலத்தில், மலேசியா பாதுகாப்பாகவும் பேரிடர் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதையும் உறுதிசெய்ய இந்தக் கொள்கையின் வெற்றிக்கு அனைத்துத் தரப்பினரின் தொடர் முயற்சிகளும் அர்ப்பணிப்பும் தேவை என்று சாஹிட் நம்பிக்கை தெரிவித்தார்.

அடிக்கடி ஏற்படும் வெள்ளம் மற்றும் இடியுடன் கூடிய மழை உட்பட எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்வதில் மக்களின் விழிப்புணர்வையும் தயார்நிலையையும் அதிகரிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

மலேசியா தற்போது பருவமழை மாற்றக் கட்டத்தின் தொடக்கத்தில் நுழைவதால் அது நவம்பர் தொடக்கம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Bernama

#NADMA
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.