பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் பிரிவு தயார் நிலையில் இருப்பதை சிலாங்கூர் அரசாங்கம் உறுதி செய்யும்

பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் பிரிவு தயார் நிலையில் இருப்பதை சிலாங்கூர் அரசாங்கம் உறுதி செய்யும்

பண்டார் புக்கிட் ராஜா, 26/09/2024 : கடந்த இரண்டு நாள்களாக நிலவி வரும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநில பேரிடர் பிரிவு மற்றும் ஊராட்சி அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதை சிலாங்கூர் மாநில அரசாங்கம் உறுதி செய்யும்.

2021-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தை கணக்கில் கொண்டு, முன்பு பயன்படுத்தப்பட்ட தற்காலிக நிவாரண மையங்களை தமது தரப்பு மீண்டும் செயல்படுத்தும் என்று அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“மழைப் பதிவு 100-க்கு கீழே இருந்தால், உண்மையில் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். நேற்று மழை விகிதம் இன்னும் அதிகமாக இருந்தது. ஆகவே, இரண்டு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நிலைமை நெரிசலானது. வெள்ளம் சுமார் ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் நீடித்தது. வெளியேற்றும் நடவடிக்கை இல்லை. இது இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் மழை விகிதம் மிக அதிகமாக இல்லாவிட்டால், வடிகால்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் அதிகரிப்போம்,”என்றார் அவர்.

வியாழக்கிழமை, பண்டார் புக்கிட் ராஜாவில் நடைபெற்ற மத்திய மண்டலத்திற்கான 2024 மலேசிய Techlympics நிகழ்ச்சியை நிறைவு செய்த பின்னர், அமிருடின் ஷாரி அவ்வாறு கூறினார்.

நேற்று பெய்த தொடர்மழை காரணமாக சிலாங்கூரின் ஜாலான் கெபுன், ஶ்ரீ மூடா மற்றும் கோத்தா கெமுனிங் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

இருப்பினும் வெள்ளம் வடிந்து விட்டதால் அங்கே வசிக்கு மக்கள் இடம் மாற்றம் செய்யப்படவில்லை.

Source : Bernama

#Selangor
#SelangorRain
#MalaysiaNews
#LatestNews
#Malaysia