தேசிய ஒற்றுமையையும் அடையாளத்தையும் வளர்க்க அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுகிறது – சரஸ்வதி கந்தசாமி

தேசிய ஒற்றுமையையும் அடையாளத்தையும் வளர்க்க அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுகிறது - சரஸ்வதி கந்தசாமி

கோலாலம்பூர், 26/09/2024 : நாட்டில் தேசிய ஒற்றுமையையும் அடையாளத்தையும் வளர்க்க அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுவதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

இந்த அருங்காட்சியகத்தில்தான் பல்லின மக்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மலேசியர்களாக ஒன்று கூட முடிகிறது. இங்குதான் நாட்டின் வரலாறு, வளர்ச்சி, பாரம்பரியத்தையும் காண முடிகிறது என்று அவர் புகழாரம் சூட்டினார்.

இன்று அருங்காட்சியக மண்டபத்தில் கருத்தரங்கு ஒன்றை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் அவ்வாறு கூறினார்.

மேலும், நாட்டின் வரலாற்றை தற்கால சந்ததியினரும் வரும் கால தலைமுறையினரும் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு வரலாற்று அம்சங்களையும் தகவல்களையும் கொண்டு செல்வதில் பாரம்பரிய நடைமுறையை நாம் இனியும் பின்பற்ற முடியாது என்பதால், மக்களுக்கு நாட்டின் வரலாறுகள் தொடர்பான தகவல்களை எடுத்துச் சொல்வதில் அருங்காட்சியகம் நவீனமய மற்றும் தொழில்நுட்ப நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

இதன்வழி மக்கள் நாட்டின் வரலாறுகளை எளிதாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் ஆலோசனை கூறினார்.

Source : Bernama

#SaraswathiKandasamy
#MalaysiaNews
#LatestNews
#Malaysia