சிறு முரண்பாடுகள் இருந்தாலும் மலேசியா – சிங்கப்பூர் உறவு தொடர்ந்து வலுக்கும் – பிரதமர்

சிறு முரண்பாடுகள் இருந்தாலும் மலேசியா - சிங்கப்பூர் உறவு தொடர்ந்து வலுக்கும் - பிரதமர்

இஸ்கண்டார் புத்ரி, 26/09/2024 மலேசியாவும் சிங்கப்பூரும் சிறந்த பங்காளிகள்.

இரு நாடுகளுக்கும் இடையே எழும் எவ்வித பிரச்சனைகளாலும் இவ்வுறவு சீர்குலையக் கூடாது.

சிறு சிறு முரண்பாடுகள் இருந்தபோதிலும் பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் பெரிய அளவில் ஒத்துழைத்துள்ளதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.

மலேசியாவும் சிங்கப்பூரும் வரும் காலங்களில் தொடர்ந்து சிறந்த பங்காளிகளாக இருப்பதோடு ஒவ்வொரு தரப்பும் ஏதாவது ஒரு வகையில் பயனடையலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

”அதேபோல், ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையிலான பரிமாற்றம் விவாதிக்க வேண்டிய ஒரு பிரச்சனை ஆகும். ஆனால், இரு நாடுகளும் வெற்றிபெற வேண்டும் என்பதில் இருந்து திசை திரும்பக் கூடாது. இரு நாடுகளும் நேர்மையாக இருந்தால், இரு தரப்பும் ஏதாவது ஒரு வகையில் பயனடையலாம். அதனால்தான் சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். ஆசியான் கூட்டமைப்பிற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தாலும், அடுத்த ஆண்டு நமது ஒத்துழைப்பையும் சரிபார்க்க வேண்டியது முக்கியமானது,” என்றார் அவர்.

இன்று, ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் Invest Malaysia 2024 @ Iskandar Puteri எனும் நிகழ்வில் தலைமை உரையாற்றிய அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

Source : Bernama

#Anwar
#SingaporeNews
#MalaysiaNews
#LatestNews
#Malaysia
#Singapore

Comments are closed, but trackbacks and pingbacks are open.