என் தமிழ்

லண்டன் பொது நடனப் போட்டியில் மலேசியாவிற்கு தங்கம்

லண்டன், 24/09/2024 : 2024ஆம் ஆண்டு லண்டன் பொது நடனப் போட்டியில் தேசிய நடனக் குழு இரு தங்கப் பதக்கங்களை வென்றது.

லத்தின் மகளீர் ஒற்றையர் பிரிவில் செர்ரி யோவும் லத்தின் இளம் பெண் ஒற்றையர் பிரிவில் மெடலினும் தங்கங்களை வென்றதாக மலேசிய நடன விளையாட்டு அமைப்பு, MYDF தெரிவித்துள்ளது.

செர்ரி யோ மற்றும் மெடலின் ஆகிய இருவரும் தங்களது அபாரமான நடன திறமையை வெளிப்படுத்தியதால் நடுவர்களை கவர்ந்து முதலிடத்தைப் பிடித்ததாக MYDF வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.

இந்த வெற்றி செர்ரியின் அடைவுநிலைக்கு சாதகமான வளர்ச்சியைக் கொடுத்துள்ளது.

லத்தின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

லத்தின் இளம் பெண் ஒற்றையர் பிரிவில் மெடலின் நான்காம் இடத்தில் உள்ளார்.

இந்தப் போட்டியில் மலேசியா உட்பட 25 நாடுகள் கலந்து கொண்டன.

Source : Bernama

#KLDSA
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaLatestNews
#Malaysia

Scroll to Top