ஜி.சி.சி-உடன் தடையற்ற வாணிக ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடும்

ஜி.சி.சி-உடன் தடையற்ற வாணிக ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடும்

நியூ யார்க், 24/09/2024 : ஆசியான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், ஜி.சி.சி நாடுகளுடன் வர்த்தகம் உட்பட முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் தடையற்ற வாணிக ஒப்பந்தம், எஃப்.டி.ஏ-வில் மலேசியா கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியா மற்றும் ஜி.சி.சி உறுப்பினர்கள் எஃப்.டி.ஏ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

மலேசியா மற்றும் ஜி.சி.சி உறுப்பிய நாடுகளான குவாய்த், ஓமான், கட்டார், சவூதி அரேபியா உட்பட ஐக்கிய அரபு சிற்றரசுக்கு இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறிய முஹமட் இது இரு தரப்புக்கும் பெரிதும் பயனளிக்கும் என்றும் விவரித்தார்.

”மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட வேண்டிய ஒத்துழைப்பு முயற்சிகள் பற்றி விவாதித்தோம். அது, இன்று மிக முக்கிய அங்கமாக உள்ளது. ஜி.சி.சி வளைகுடா நாடுகள். மேலும் இந்த வளைகுடா நாடுகளுடன் எஃப்.டி.ஏ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்”, என்று அவர் கூறினார்.

திங்கட்கிழமை, அமெரிக்கா, நியூ யார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா-விற்கான மலேசிய நிரந்தர தூதர் அலுவலகத்தில் முஹமட் செய்தியாளர்களிடம் பேசினார்.

Source : Bernama

#MalaysiaNews
#LatestNews
#MalaysiaLatestNews
#Malaysia