வாஷிங்டன்(அமெரிக்கா), 23/09/2024 : 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால், அடுத்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணையதிபர் கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சியின் சார்பில் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
வரும் தேர்தலில் தோல்வி கண்டால் 2028-ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவீர்களா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.
அதற்கு வாய்ப்பு இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
Source : Bernama
#USElections
#DonaldTrump
#MalaysiaNews
#LatestNews
#Malaysia