இலங்கையின் புதிய அதிபரானார் அனுரா குமார திசநாயகே

இலங்கையின் புதிய அதிபரானார் அனுரா குமார திசநாயகே

கொழும்பு(இலங்கை), 23/09/2024 : இலங்கையின் ஒன்பதாவது அதிபராக தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திசநாயகே இன்று பதவியேற்றார்.

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட வேளையில், தொடக்கம் முதலே முன்னிலை வகித்த அனுர குமார திசநாயகே, மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் அதிக இடங்களை வென்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையின் மோசமான நிதி நெருக்கடிக்குப் பிறகு ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அனுர குமார திசநாயகே, அளித்த வாக்குறுதியின் மீது, மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதை இந்த வெற்றி பிரதிபலிக்கின்றது.

55 வயதுடைய அவர், போட்டியிட்ட இதர வேட்பாளர்களைப் போல், அரசியலில் எந்தவொரு பின்னணியையும் கொண்டிருக்கவில்லை.

ஆயினும், அரசியலில் அனுபவம் வாய்ந்து, அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரை அனுர குமார திசநாயகே தோற்கடித்துள்ளார்.

முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் மொத்த வாக்குகளில் 50 விழுக்காட்டிற்கும் மேல் பெறவில்லை.

50 விழுக்காடு வாக்குகள் கிடைக்காத பட்சத்தில், மக்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த அதிபர் யார் என்பது தீர்மானமானது,

அந்த இரண்டாம் சுற்றில், அனுர குமார திசநாயகேவுக்கு 42.31 விழுக்காடு அதாவது 5,634,915 வாக்குகள் கிடைத்தன.

அவரை அடுத்து, சஜித் பிரேமதாசாவுக்கு 43 லட்சம் வாக்குகளும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு 2 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகளும் கிடைத்துள்ளன.

அதோடு, இதில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்‌சே படுதோல்வி அடைந்த வேளையில், ராஜபக்சேக்கள் கோட்டைகள் அனைத்தும் இந்த தேர்தலில் முற்றிலும் தகர்ப்பட்டுள்ளன.

Source : Bernama

#SrilankaElections
#SriLanka
#MalaysiaNews
#LatestNews
#Malaysia