பெய்ஜிங், 22/09/2024 : செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்களுக்கு சீனாவிற்கு மேற்கொண்ட பயணத்தை முடித்துக்கொண்டு மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நாடு திரும்பினார்.
இன்று காலை மணி 9.28-க்கு, பெய்ஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம், அரச மலேசிய ஆகாயப் படை விமானத் தளத்தைப் பிற்பகல் மணி 2.55-க்கு வந்தடைந்தது.
கடந்த ஜனவரி 31-ஆம் தேதி 17-வது மாமன்னராக பொறுப்பேற்ற பின்னர், சீன அதிபர் சி ஜின்பிங் விடுத்த அழைப்பை ஏற்று அக்குடியரசுக்குச் சுல்தான் இப்ராஹிம் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
வெள்ளிக்கிழமை, பெய்ஜிங்கில் உள்ள Great Hall of the People கட்டடத்தில் சுல்தான் இப்ராஹிமிற்கு, அதிகாகாரப்பூர்வ வரவேற்பும் மரியாதையும் நல்கப்பட்டது.
அதன் பின்னர் சீனப் பிரதமர் லீ கியாங்கையும் மாமன்னர் சந்தித்தார்.
பயணத்தின் நிறைவு அங்கமாக, சீனாவின் விமான தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்வையிடுவதற்காக COMAC எனப்படும் பெய்ஜிங் பொது விமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கும் மாமன்னர் சென்றிருந்தார்.
Source : Bernama
#AgongChinaVisit
#MalaysiaNews
#LatestNews
#Malaysia