ஷா ஆலாம் 16/09/2024 : நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களையும் அல்லது உணவு மற்றும் பானங்கள் (F&B) தொழில்துறையையும் ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற முடிவை அரசாங்கம் ஒருபோதும் எடுக்கவில்லை.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஹலால் சான்றிதழைப் பற்றிய எந்தவொரு திட்டமும் ஆய்வும் முஸ்லிம் அல்லாத தொழில்முனைவோரை கட்டாயப்படுத்தாது என்று தனதுரையில் கூறினார்.
மலேசிய இந்தியர் காங்கிரஸின் 78வது பேராளார் மாநாட்டின் அதிகார திறப்புரையில் துணைப் பிரதமர் இத்தகவலை தெரிவித்தார்.